அப்துல் கலாம் தீவு, ஒரிசா
இலக்கு நோக்கி அணு ஆயுதத்துடன் சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது
சுமார் 12 டன் எடை கொண்ட அக்னி 1 ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணு ஆயுத பொருட்களை எடுத்துச் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை உள்ளது. இது நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும். 700 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை சோதிக்க இந்தியா திட்டமிட்டிருந்தது.
ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடைபெற்றது. அக்னி 1 ஏவுகணை 700 கிமீ தூரத்தில் இருந்த இலக்கை சரியாக தாக்கி சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த சோதனை வெற்றிக்கு மகிழ்ச்சியை தெரிவித்த இந்திய ராணுவ ஆராய்ச்சிக் கழகம் இது வழக்கமான பயிற்சிக்கான சோதனை என அறிவித்துள்ளது.