மாஸ்கோ

நாளை மீண்டும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக ரஷ்யச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள அனைவரும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்கு வர வேண்டும் என மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.   சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தப்பட்டது.  இதற்கு ரஷ்யா ஒப்புதல் தெரிவித்தது

இதையொட்டி பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது.  இந்த பேச்சு வார்த்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நிபந்தனை விதித்த உக்ரைன் பிறகு தந்து முடிவை மாற்றிக் கொண்டது.   இதையொட்டி நேற்று மாலை உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே சமரச பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் பிரதிநிதிகள் உடனடியாக ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் எனவும் உக்ரைன் நாட்டில் உள்ள ரஷ்ய ப் படைகளை உடனடியாக வெளியேற ரஷ்ய அரசு உத்தரவிடவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.  இதற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளாததால் எவ்வித முடிவும் ஏற்படவில்லை.

இன்று ஆறாம் நாளாக ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது ஏவுகணை த் ஆக்குதல் நடத்துகின்றன.   அந்நாட்டின் பெரிய நகரான கார்கிவ் நகரில் நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்தார்.  நாளை கிவ் நகரின் பல முக்கிய இடங்களைக் குறி வைத்து தாக்குதல் நடைபெறும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்டுள்ளது.

இதற்கிடையே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே பெலாரஸ் நாட்டில் பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் ஏற்படாத நிஅலியில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.