சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ் இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தை நடத்திய நிலையிலும், இன்னும் உடன்பாடு எட்டாத நிலையில், நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று  மா.கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விசிகவுக்கு 2தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளுடன் இன்று 2வது கட்ட  தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது. இன்று காலை விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீட்டுக்கான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டவில்லை.தொகுதி ஒதுக்கப்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

தொகுதிகள் குறித்த எண்ணிக்கையை திமுகவிடம் தெரிவித்துள்ளோம். திமுக அளிக்கும் எண்ணிக்கை குறித்து நாளை நடைபெறும் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு அநேகமாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை திமுகவுடன் நாளை நடைபெறும் என்றார்.