அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? விமானப்படை தளபதி

Must read

கோவை:

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின ரால் சிறை பிடிக்கப்பட்ட விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவை  சூலூர் விமானப்படை தளபதி தனோயாவிடம் அபிநந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தனோவா,  அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் பைலட்டாக பணியில் சேர முடியுமா, இல்லையா என்பதை அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கைதான் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

ஏர் மார்ஷல் தனோயா – அபிநந்தன்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை வீரர், தனது விமானம் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாராசூட் உதவியுடன் கீழே குதித்தபோது, பாகிஸ்தான் நிலப் பரப்பில் இறங்கினார். இதன் காரணமாக அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து விசாரணை நடத்தியது.

அபிநந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா உள்பட உலக நாடுகள் வற்புறுத்தி யதை தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கோவை சூளுர் விமானப்படை தளபதி தனோயாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எபப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  மீண்டும் அபிநந்தனை பைலட் பணியில் சேர்க்க முடியுமா இல்லையா என்பதை, நாங்கள் தீர்மானிக்க முடியாது. முழு அளவில் உடல் நிலை சரியாக மீளும் பட்சத்தில், மீண்டும் அதே யூனிட்டில் அவர் பணிக்கு சேர முடியும். இதற்கு நிறைய பேர் உடல்நிலை பரிசோதனை நடைமுறைகள் உள்ளன.

உடல்நிலைதான் முக்கியமே தவிர, கைது நடவடிக்கை உள்ளிட்டவை மீண்டும் அவரை பணியில் சேர்ப்பதில் இருந்து தடுக்க ஒரு காரணமாக இருக்காது.

இவ்வாறு தெரிவித்தார்

More articles

Latest article