சென்னை,

சிகர்களுடன் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து  மீண்டும் சந்திப்பு நடைபெறும் என்று சென்னை  விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

கடந்த மாதம் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் திடீரென ரசிகர்களுடான சந்திப்பு ஏற்பாடு செய்தார். அதைத்தொடர்ந்து  15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை தொடர்ந்து 5 நாள்கள் சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அப்போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதன் காரணமாக ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரிவினரும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினரும் தர்க்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  ரஜினியின் 164- ஆவது படமான காலா கரிகாலன் பட்ம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து  படத்தின் படப்பிடிப்பு கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 10 நாள்கள் மும்பை தாராவி பகுதியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.

மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்த இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

ஆனால், அவர்,  இன்னும் 2 மாதங்கள் கழித்து ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பேன் என்றும், வரும் 24-ம் தேதி காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன என்று கூறிவிட்டு, அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து எஸ்கேப்பாகி  காரில் ஏறி சென்றுவிட்டார்.