சிங்கப்பூர் 

டந்த 2 வாரங்களில் சிங்கப்பூரில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது.  கொரோனாவின் பாதிப்பு முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் வெகுவாகக் குறைந்தது. தற்போது பல நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது..  கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங்

”மீண்டும் கடந்த ஆண்டை போல இன்னொரு கொரோனா அலை இங்கு வரலாம். ஆகவே முக கவசம், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.  ஆனால் . ஊரடங்கு உத்தரவு போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை” 

எனத் தெரிவித்துள்ளார்.