நேபாளத்தில் ஏறப்ட்ட நிலச்சரிவால், அங்கு  சிக்கித்தவித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பயணிகள்  10 பேரும் டெல்லி வந்தனர்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,992-க்கும், ஒரு சவரன் ரூ.23,936-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.51.90-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.48,515-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கை அருகே டயர் வெடித்து தனியார் பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த +2 மாணவி திவ்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் தனியார் பள்ளி வேனின் சக்கரம் கழன்று விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் இருந்த 52 மாணவர்களும் அதிர்ச்டஅவசமாக உயிர் தப்பினர். வெள்ளப்பள்ளத்தில் இருந்து மாணவர்களை ஏற்றி பள்ளிக்கு புறப்பட்டபோது வென்சக்கரம் கழன்று ஓடியது. விபத்தை அடுத்து அன்னை வேளாங்கண்ணி பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 பஹ்ரைனில் கடத்தப்பட்ட 5 வயது சிறுமி சாரா மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். சிறுமியை மீட்க உதவிய பஹ்ரைன் அரசுக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் கஞ்சா வியாபாரியை பிடிக்கச்சென்ற காவல் சார்பு ஆய்வாளருக்கு கத்திகுத்து விழுந்தது. இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்றவரை மடக்கி பிடிக்க முயன்ற எஸ்.ஐ. வீராச்சாமி கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த எஸ்.ஐ. வீராச்சாமி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பந்தலூர் அருகே தேயிலைத் தோட்டங்களில் உலா வரும் யானைகளால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.66.87-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.66.99-ஆக இருந்தது.
 தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த இலவச காஸ் இணைப்பு திட்டம் பற்றி ஏழைப் பெண்களிடம் விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
பெங்களூரு அருகேயுள்ள நீலமங்களா பகுதியில் லதா (40) ஆசிரியையிடம் அப்பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 7 வயது மகள் டியூசன் படித்து வந்தார். ஆசிரியை கொடுத்த வீட்டுப்பாடத்தை சிறுமி செய்யாத காரணத்தினால், லதா, சிறுமியை லெதர் பெல்ட்டால் முதுகில் கடுமையாக தாக்கினார். இதில் சிறுமிக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த அந்த சிறுமி கதறியபடி தனது வீட்டிற்கு வந்தார்.இதனை பார்த்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து போலீசில் ஆசிரியை குறித்து புகார் அளித்தனர். புகார் அளிக்கப்பட்டது தெரிந்ததும், லதா தலைமறைவானார்.
2b3fe60fea66714e140489de47461d90_ft_m
பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் நீர்த் தேக்கத்தொட்டி மீது ஏறி 15 பேர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முத்துமாரியம்மன் கோயில் சிலையை வருவாய்த்துறையினர் அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து இப்படி நடந்துகொண்டுள்ளனர். 
சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் பயங்கரவாதி ஒருவன் கத்தியால் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ராஜ்யசபாவில் தெரிவித்தார்
மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது: காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு; அதிமுக வெளிநடப்பு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) முதல் ஆறு மாதங்களுக்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து பழனி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ரயிலின் 2 பெட்டிகள் மற்றும் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015-16ம் நிதியாண்டில், பொது துறை வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.5.73 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளது என மத்திய நிதி துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு
யானைகள் ரயிலில் அடிப்பட்டு பலியாவது வழக்கமாகி வருகிறது.எனவே கோவை வனங்களில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளில் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஜூன் 30ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த வன்முறைச் சம்பவத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் இடது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. இது தொடர்பான வழக்கில், அவருக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈட்டை தமிழக அரசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பீகார் மாநிலம், கடிஹர் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஒருவன், பள்ளி பேருந்தில் இருந்து கடத்தப்பட்டார். இதனையடுத்து கடத்தப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியில்லாதவர் –ஒபாமா
நெல்லை உள்ளிட்ட 4 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதியோர் சிறப்பு சிகிச்சை பிரிவு விரைவில் தொடக்கம்
பலாத்காரம் செய்பவர்கள் பயங்கரவாதிகள், அவர்களை அடித்து கொல்ல வேண்டும் — கபில் மிஸ்ரா
மைசூர் நீதிமன்ற வளாக கழிவறையில் வெடிகுண்டு வெடிப்பு நடத்திய சமூக விரோதிகள், முதலில் சாம்ராஜ்நகர்-திருப்பதி செல்லும் ரயிலில் குண்டு வைக்க திட்டமிட்டதாகவும், ரயில் தாமதமாக வந்ததால், நீதிமன்ற கழிவறையில் வைத்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.
குஜராத் மாநில முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு எதிராக, 700 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை- நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், ரயில் பயணியர் கட்டணங்களின் மூலம் ஈட்டப்படும் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதை விட 9.97 சதவீதம் குறைந்துள்ளதாக, மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் புதிய முதல்வர் குறித்து அமித் ஷா இன்று ஆலோசனை
மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி விற்கப்பட்ட வழக்கில், பி.ஆர்.பி.கிரானைட் உள்ளிட்ட 3 நிறுவனங்களால் அரசுக்கு ரூ. 120.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை 1,629 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் –அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி