துரகிரி

துரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் பிரதோஷ பூஜையை முன்னிட்டு ஜூலை 15 முதல் 18 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிகப்ப்பட்டனர்.  நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் இங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு பரவத் தொடங்கியது.

காட்டுத்  தீ மிகவும் கடுமையாக இருந்ததால் பக்தர்களைக் கோவிலை விட்டு இறங்க வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.  இன்று சுமார் 20 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது.  இதையொட்டி மலையில் சிக்கிய பக்தர்கள் சிறிது சிறிதாக கீழிறங்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து காட்டுத்தீ எறிந்து வருவதால் சதுரகிரி மலைக்குச் செல்ல இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனவே மலைக்கு வந்த பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பிச் செல்கின்றனர்.  தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.