சென்னை:

தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றுள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்,  கவர்னர் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார்.

கவர்னராக பதவி ஏற்ற நிலையில், சென்னை வருகை தரும் தமிழிசை,  முதன்முதலாக பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன்படி, வி.ஜி.சந்தோசம் எழுதியுள்ள சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர் என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை  மத்திய அரசு தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து அவர் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதைத்தொடர்ந்து கடந்த 8ந்தேதி  தெலுங்கானா மாநிலஆளுநராக பதவி ஏற்றார்.   இதன் மூலம் தமிழிசை தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நிலையில் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்ள தெலுங்கானா ஆளுநரான தமிழிசை முதன்முறையாக சென்னை வருகிறார்.