டெல்லி: தொலைபேசி ஒட்டுக்கேட்பை தொடர்ந்து தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘ஹேக்’  செய்யப்படுகிறது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், 40பத்திரிகையாளர்கள், என ஏராளமானோரின்  செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.  அதன்படி, காங்கிரஸ்   தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மத்தியஅரசு வெளிப்படையாக கருத்து கூற மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து விசார நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகளும் ஹேக் செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். ஏற்கனவே தனது போன் ஒட்டுக்கேட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகளும் கண்காணிக்கப்படுகிறது என்று கூறி உள்ளார்.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பல்லவி கோஷ் டிவிட் மூலம் தெரிவித்துள்ளார்.