தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சந்தையில் நெல் விலை 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2000 முதல் 2200 வரை விற்ற 75 கிலோ பிபிடி ரக நெல் மூட்டை விலை தற்போது ரூ. 2800 வரை விற்கப்படுகிறது. இது நான்கு மாதங்களுக்கு முன்பு ரூ. 2500 ஆக இருந்தது.

சரியான காலத்தில் பருவ மழை பெய்யாததும் ஒரு சில மாவட்டங்களில் போதுமான மழை பெய்யாததாலும் உள்நாட்டு உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்திருப்பதால் நெல்லின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அரிசி ஆலைகள் வைத்திருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிக விலை கொடுத்து நெல்லை வாங்கி அரிசி தயாரிக்கும் இந்த ஆலைகள் தயாரிப்பு செலவை ஈடுசெய்யத் தேவையான லாபம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றன.

இதனையடுத்து அரசியின் விலை கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 12 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு விவசாய சாகுபடிக்கான விலை ஏக்கருக்கு ரூ. 5000 முதல் ரூ. 10,000 வரை உயர்ந்துள்ளதை அடுத்து வரும் மாதங்களில் நெல்லின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

விவசாய இடுபொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் சாகுபடி செலவு அதிகரித்திருப்பதை அடுத்து அறுவடையான நெல்லை நல்ல விலைக்கு விற்கவே விவசாயிகள் விரும்புவதை அடுத்து சந்தையில் நெல் விற்பனை குறைவாகவே உள்ளதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.