இயல்பு நிலைக்கு திரும்பினார் ம.நடராஜன்!

Must read

சென்னை,

றுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

நடராஜன் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், அதற்கான புகைப்படமும் வெளியாகி உள்ளது.

திருமதி வி.கே சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராஜன்  உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு சிறுநீரகம்- கல்லீரல் பாதிப்படைந்திருந்தது.  அதைத்தொடர்ந்து அவருக்கு உறுப்பு  மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மூளைச்சாவு அடைந்த தஞ்சாவூரை சேர்ந்த  கார்த்தி என்பவரை  சென்னை மருத்துவமனைக்கு  அழைத்து வந்து, அவரது உடல் உறுப்புகளை அகற்றி  நடராஜனுக்கு  பொருத்தப்பட்டது. கடந்த அக்.4ந்தேதி இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நடராஜன்  தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு புதியதாக இணைக்கப்பட்ட உறுப்புகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டதாகவும், அவரது உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதையடுத்து இன்னும் சில நாட்களில் நடராஜன் வீடு திரும்புவார் என்றும், சிறிது கால ஓய்வுக்கு பிறகு அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More articles

Latest article