கொல்கத்தா: மேற்குவங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 06 ஆகும். இதையடுத்து ஏப்ரல் 7ந்தேதி வேட்பு மனுப் பரிசீலனையும், ஏப்ரல் 8ந்தேதி வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாளாகும். இதையடுத்து, ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2வது கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 02 தொடங்கு கிறது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 09ந்தேதியும். தொடர்ந்து ஏப்ரல் 10ந்தேதி வேட்பு மனுப் பரிசீலனை செய்யப்படுகிறது.வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள் ஏப்ரல் 13 இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் இந்த தொகுதிகளில் ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளார்.
இந்த நிலையில் டெப்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில், “தேர்தல்கள் முடிந்து, மேற்கு வங்கத்தில் நாம் வெற்றி பெற்ற பிறகு, அனைவரையும் ஒன்றிணைத்து, நாடு முழுவதிலும் உள்ள மக்களைத் திரட்டி டெல்லியைக் கைப்பற்றுவோம்,” என்று கூறினார்.
மேலும், தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC), மாநிலத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று உறுதியளித்தவர், அரசியல், கலாச்சாரரீதியாக மேற்குவங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி செய்கிறது. இந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதன்பிறகு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து டெல்லியிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றார்.
மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டன. எங்களது சட்டப் போராட்டத்தால் நீக்கப்பட்டோரில் 50 சதவீதம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளோம். திரிணமூல் காங்கிரஸில் பழங்குடி, இந்து, முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுகிறோம். ஆனால் பாஜக பிரிவினையை தூண்டி வருகிறது. மேற்குவங்கத்துக்கு வெளியே வங்க மொழியை பேசுவோர் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாஜக தலைவர்கள் மதத்தை வைத்து வியாபாரம் நடத்துகின்றனர். நாங்கள் மனித நேயத்தை முன்னிறுத்தி சேவையாற்றுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
[youtube-feed feed=1]