7ஆண்டு கால நெரிசலுக்கு முடிவு: ஆகஸ்டு 3ந்தேதி முதல் மீண்டும் இருவழி பாதையாகும் அண்ணாசாலை…..

Must read

சென்னை:

சென்னைமெட்ரோ ரெயிலுக்காக அண்ணாசாலையில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்டு 3ந்தேதி முதல், அண்ணா சாலை இருவழிப்பாதையாக வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளமு

கடந்த 2012ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில், மெட்ரோல் ரயில் பயணிகள்   தொடங்கிய போது ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், கடுமையான வாசன நெரிசலும் ஏற்பட்டு வந்தது. சுமார்  7 ஆண்டுகள் சென்னைவாசிகள் இந்த கஷ்டத்தை அனுபவித்து வந்த நிலையில், தற்போது, மெட்ரோ பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்டு 3ந்தேதி  முதல் அண்ணா சாலை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில்  கடந்த 2012ம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கியது.  சென்டரல்- மவுன்ட் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் செல்லும் வழி மற்றும்  ரயில் நிலையம் அமைப்பதற்காக, அண்ணாசாலையில் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., மற்றும் ஆயிரம் விளக்கு பகுதிகளில் ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாகனங்கள்  ஜி.பி., சாலை, ஒயிட்ஸ் சாலை உள்பட பல இடங்கள் வழியாக திருப்பி விடப்பட்ன. ஜி.பி.,ரோடு, உட்ஸ்ரோடு, ஒயிட்ஸ் ரோடு மற்றும் திரு.வி.க., ரோடு ஆகியவை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. மேலும்,  தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை, கிண்டி வழியாகச் செல்லவும், அங்கிருந்து தேனாம்பேட்டை வருவதற்கும், நந்தனம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி மந்தைவெளி செல்லவும் மட்டுமே அந்தச் சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது.

தியாகராயநகரில் இருந்தோ, கோட்டூர்புரம் வழியாகவோ, நந்தனம் சிக்னலை நேரடியாகக் கடக்க முடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தன

சென்னையின் இதயப்பகுதியான அண்ணா சாலையின் பல பகுதிகளில், ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டதால், கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.  தற்போது இதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

நான்கு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ள நந்தனம் ஜங்ஷன்

மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சாலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 99 சதவிகிதம் முடிவடைந்து உள்ளது. அதன் காரணமாக சமீபத்தில் சென்னை நந்தனம் ஜங்சன் மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி விடப்பட்டது. நந்தனம் பகுதியில் பயன்பாட்டிலிருந்த ஒருவழிச் சாலை   நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் மக்கள்  கோட்டூர்புரத்தில் இருந்து நேரடியாக தியாகராய சாலைக்கு செல்லவும், அங்கிருந்து நேரடியாக வரவும் முடியும். அதே போல் வெங்கட் நாராயணன் சாலை வழியில்  நந்தனம் சிக்னலை எளிதில் கடக்கலாம்.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் நேரமும் மிச்சமாகும் என்று பொதுமக்கள் கருத்து  கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆகஸ்டு 3ந்தேதி முதல் அண்ணா சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது வாகன ஓட்டிகளிடையே மகழ்ச்சியை அளித்துள்ளது.

More articles

Latest article