சென்னை

ல்லாவரத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச் சந்தை நடப்பது வழக்கம்,   அக்கம் பக்கம் உள்ளோர் இங்கு வந்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கமாகும்.  இங்குள்ள மக்களுக்கு இது மிகவும் வசதியாக இருந்தது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவது தடை செய்யப்பட்டது.  அவ்வகையில் பல்லாவரம் வாரச்சந்தை மூடப்பட்டது.  இதனால் வியாபாரிகள் பெரிதும் துயர் அடைந்தனர்.  தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.

இதையொட்டி காவல் துறையினர் அனுமதியுடன் மீண்டும் பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தைத் திறக்கப்பட்டுள்ளது.  கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் வாரச்சந்தை 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.   இதனால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]