சென்னை

றுபது வருடங்கள் கழித்து சங்கராச்சாரியாரின் சாதுர் மாச விரதத்தையொட்டி சென்னையில் ஆன்மீக கூட்டம் (சதஸ்) நடைபெற உள்ளது.

 

சதஸ் என்னும் ஆன்மீக கூட்டம் வேத விற்பன்னர்களால் நடத்தப்படுவதாகும்.   இந்த வழக்கம் ஆதி சங்கரர் காலத்தில் தொடங்கப்பட்டதாகும்.  ஆதி சங்கரர் இந்து மதத்தின் முக்கிய பாகங்களாக வேதாந்த உபநிஷதம், பகவத்கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை அறிவித்தார்.   இவற்றுக்கான பொருளையும் அவர் எழுதி உள்ளார்.    இந்த மூன்றையும் பரப்ப அவர் நாடெங்கும் நான்கு மடங்களை உருவாக்கினார்.   அந்த வழியில் ஐந்தாம் மடமாகக் காஞ்சி காமகோடி பீடம் அமைந்துள்ளது.

ஆதி சங்கரருக்குப் பிறகு  வந்த அமலானந்த சரஸ்வதி, வசஸ்பதி மிஸ்ரா, அடையாபாளையம் அப்பைய தீட்சிதர் உள்ளிட்டோர் இதன் அடிப்படையில் கிரந்தங்களை  உருவாக்கினார். இவர்களைப் போன்ற ஆன்றோர்கள் கலந்துக் கொண்டு விவாதம் செய்யும் ஆன்மிக கூட்டமே சதஸ் என அழைக்கப்படுகிறது.  குருகுல வழியில் வேதங்களை கற்றவர்கள் மட்டுமே இத்தகைய சதஸ்களில் கலந்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் இத்தகைய சதஸ்களை அத்வைத சபை நடத்தி வருகிறது.   கடந்த 1894 ஆம் வருடம் காமகோடி பீடத்தின் 66 ஆம் மடாதிபதியால் இந்த சபை தொடங்கப்பட்டது.   இந்த சதஸ் சாதுர் மாஸ்ய விரத சமயத்தில் நடத்தப்படுகிறது.   இந்த விரதம் முன்பு மடாதிபதிகளால் நான்கு மாதம் அனுசரிக்கப்பட்டது.  தற்போது அது இரண்டு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.    நான்கு மாதம் என்பது தற்போது நான்கு பட்சம் (15 நாட்கள் கொண்டது ஒரு பட்சம்) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை வீனஸ்காலனியில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் காமகோடி பீடத்தின் 70 ஆவது மடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி தங்கி சாதுர் மாச விரதம் அனுசரித்து வருகிறார்.   அங்கு அத்வைத சபை சதஸ் நடத்த உள்ளது.   கடந்த 1959 ஆம் வருடம் காமகோடி பீடத்தின் மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இத்தைகைய சதஸ் ஒன்றை நடத்தினார்.   அதன் பிறகு அறுபது வருடங்கள் கழித்து இந்த சதஸ் மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது.