பாங்காக்

டந்த 2014 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பை தாய்லாந்து அரசு மாளிகை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் தேர்தல்கள் நடத்தக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இந்த கோரிக்கையை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. அத்துடன் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன.

சமீப காலமாக தேர்தல் நடத்தக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதை ஒட்டி அரசு வரும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தேர்தல் நடத்த உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்த அரசு தேர்தல் நடத்த தேவையான பணிகளை பிப்ரவரி மாத்ம் 24 ஆம் தேதிக்குள் முடிக்க முடியாது எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் தாய்லாந்து அரசு மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ அரசு உருவாக்கி உள்ள தேர்தல் சட்டத்தின்படி பொதுத் தேர்தல் நடத்த அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் ஐந்து தினங்களுக்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள்து