இன்று 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

Must read

சென்னை

ன்று தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன,

கொரோனா பரவல் தமிழகத்தில் தற்போது வேகமெடுத்துள்ளது.  கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாகப் பரவி வருகிறது.  வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஜனவரி 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தவிர வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்தது. கடந்த ஜனவரி 14ம் தேதி முதல் நேற்று வரை அனைத்து வழிபாட்டு தலங்களும் மூட உத்தரவிடப்பட்டது.  ஆயினும் வழிபாட்டுத் தலங்களில் தினசரி  நடைபெறும்  பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

நேற்று தைப்பூச நாளன்று முருகன் கோவில்களில் அபிஷேகம் சிறப்புப் பூஜை ஆகியவை பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.  . பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 5 நாட்களாகக் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை முதலே சாமி தரிசனத்திற்காக வழிபாட்டு தலங்களில் குவியத் தொடங்கி உள்ளனர்.

More articles

Latest article