டில்லி

திகாரப் பூர்வமான கொரோனா மரண எண்ணிக்கையைப் போல் 9 மடங்கு எண்ணிக்கையில் குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் இழப்பீடு கோரிக்கைகள் வந்துள்ளன.

கொரோனாவால் அரசு அறிவிப்பின்படி இதுவரை கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை உண்மையில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாகும்.  தற்போது கொரோனாவால் மரணம் அடைந்தோருக்கான இழப்பீடு கோரி விண்ணப்பங்கள் வருகையில் அதிகாரப் பூர்வ அறிக்கையை விட அல மடங்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வருகின்றன.

இதில் குஜராத் மற்றும் தெலுங்கானாவில் மிகவும் அதிக அளவில் வித்தியாசம் உள்ளது.  குஜராத் மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக 10,094 பேர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 89,863 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   இது 9 மடங்கு அதிகமாகும்.  இதைப் போல் தெலுங்கானா மாநிலத்தில் 3.993 பேர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு 28,969 பேர் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர்

இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 92,275 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.  இங்கு 1,41,737 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு இழப்பீடு கோரி 2,13,890 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   இதைப் போல் பஞ்சாப் மாநிலத்தில் 6,842 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.  இங்கு 16,557 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு 8,786 பேர் மட்டுமே இழப்பீடு கோரி உள்ளனர்.