டில்லி

த்திய அரசு குடியிருப்போர் மற்றும் உரிமையாளர்களுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டுள்ள வாடகைச் சட்டத்தின் மாதிரியை அளித்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற சொத்துக்கள் அமைச்சரவை கடந்த 2015 ஆம் வருடம் வாடகை மாதிரிச் சட்ட மசோதாவை உருவாக்கியது.  ஆனல் அதை அமைச்சரவை வெகுநாட்களாக கிடப்பில் போட்டது.  பிரதமர் மோடி இந்த சட்டத்தை குறித்து பலமுறை விரிவாக பேசி உள்ளார்.   ஆயினும் இந்த மசோதா வெளியுலகுக்கு வராமலே இருந்து வந்தது.

சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது மக்களவையில் இந்த மசோதாவை மோடி அரசு அளித்துள்ளது.   வாடகை மற்றும் நில உரிமை குறித்த முடிவுகளை மாநில அரசுகள் மட்டுமே எடுக்க உள்ளதால் இது மாதிரி சட்டம் என அழைக்கப்படுகிறது.  ஏனென்றால் இந்த சட்டத்தை அமுல் படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களுக்கு முழு உரிமை உள்ளது.

இந்த மசோதாவில், “இந்த சட்டத்தின் மூலம் வாடகைதாரர் மற்றும் சொத்துக்கள் குறித்த  அனைத்து முடிவுகளையும் எடுக்க துணை ஆட்சியருக்கு சமமான பதவியில் உள்ள ஒரு அதிகாரி மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டும்.  இந்த அதிகாரி ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அனைத்து ஒப்பந்த விவரங்களையும் வெளியிட வேண்டும்.

இந்த வாடகை அமைப்புக்கு உரிமையாளர் மற்றும் குடி இருப்போர் ஆகிய இருவரும் ஒப்பந்த விவரங்களை அவசியம் தெரிவிக்க வேண்டும்.   இதனால் உரிமையாளர் தனது விருப்பத்துக்கு ஏற்ப அடிக்கடி வாடகையை உயர்த்த முடியாது. மற்றும் அவர் குடியிருப்போரை கால அவகாசமின்றி காலி செய்ய வைக்க முடியாது.

அதே நேரத்தில் உரிமையாளரிடம் இருந்து குடியிருப்போர் தங்கள் வசம் உள்ள சொத்தை சூறையாட முடியாது.  அத்துடன் உரிமையாளர்களுக்கு சந்தை நிலவரப்படி அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச வாடகையை அளிக்க வேண்டும்.  மேலும் ஒப்பந்தம் முடிந்த உடன் அது மீண்டும் புதுப்பிக்காவிடில் உடனடியாக காலி செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.