டாப்ஸ்லிப்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொள்ளாச்சி அருகே உ ள்ள டாப்ஸ்லிப்பில் யானை பொங்கல் திருவிழா நடந்துள்ளது.
தமிழகத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் பகுதியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குத் தமிழக அரசின் உத்தரவின் பேரில் இங்கு ஆண்டுதோறும் யானை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானோ தொற்று காரணமாகக் கொண்டாடப்படாமல் இருந்த யானை பொங்கல் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெற்றது. இதையொட்டி சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிந்து டாப்சிலிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு, யானை வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பழங்குடியின மக்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்து, வளர்ப்பு யானைகளுக்குப் பழம், கரும்பு, சத்து மாவு உணவாக வழங்கப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளைத் தூக்கி விநாயகரை வழிபாடு செய்த காட்சி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்தது. இந்த யானை பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.