விருதுநகர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த குற்றச்சாட்டை  ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி என்பவர் அளித்தார்.

இதன் அடிப்படையில் ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  தலைமறைவான அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.   பிறகு உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்லதம்பியைக் கைது செய்யப்பட்டுள்ளார்   விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 30 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் புகார் அளித்தார்

இதையொட்டி விஜய் நல்லதம்பி தலைமறைவாகி விட்டார்.  அவரைத் தேடி வந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.  விஜய் நல்லதம்பியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.    இந்த சம்பவம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.