கவுதம் கம்பீருடன் மீண்டும் லடாயைத் துவக்கிய ஷாகித் அஃப்ரிடி!

Must read


லாகூர்: “ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில் கம்பீரைப் பிடிக்கும். ஆனால், மனிதர் என்ற முறையில் அவருக்கு சில பிரச்சினைகள் உள்ளன” என்று பஞ்சாயத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார் பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி.
சமீபத்தில் கொரோனாவால் ஷாகித் அஃப்ரிடி பாதிக்கப்பட்டபோது, அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்திருந்தார் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் – அஃப்ரிடி இடையிலான நீண்டகால மோதல் புகழ்பெற்றதாகும். இந்நிலையில், சமீபத்தில் அடங்கியிருந்த இம்மோதலை, தற்போது மீண்டும் தொடக்கி வைத்துள்ளார் அஃப்ரிடி.
இவர் கூறியுள்ளதாவது, “ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு பேட்ஸ்மேனாக எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால், ஒரு மனிதராக அவர் சில வேளைகளில் சிலவற்றைப் பேசுகிறார். அவருக்கு, ஏதோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவரது உடற்பயிற்சியாளர் (பேடி அப்டன்) ஏற்கெனவே இதை தெளிவுபடுத்தியுள்ளார்” என்றுள்ளார் அஃப்ரிடி.
“பலவீனமானவர் மற்றும் மனதளவில் பாதுகாப்பற்றவராக அவர் உணர்கிறார்” என்று கூறியதைத்தான் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

More articles

Latest article