பாக்தாத்:
ராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடி தளர்ந்து வருகிறது. அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலுாஜா நகரின் அரசு தலைமை அலுவலகத்தை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த
பலுாஜா நகரை, ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க, ஈராக் ராணுவம், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து போரிட்டு வந்தது. ஆனால், பயங்கரவாதிகள், மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வந்தனர்.
Tamil_News_large_1545324_318_219
இந்த நிலையில், பயங்கரவாதிகளின் தடைகளை முறியடித்து  அரசுப்படைகள், பலுாஜா நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்தன.  அங்குள்ள அரசு தலைமை அலுவலக கட்டடத்தை கைப்பற்றின. பலுாஜா நகர் மீட்கப்பட்டது, அரசு படைகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் குறித்துஅமெரிக்காவின் சி.ஐ.ஏ., உளவு அமைப்பு இயக்குனர் ஜான் பிரின்னன், “ ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடி தளர்ந்து வருவதால் அவர்கள், ஆப்ரிக்க நாடுகளின் மீது  பார்வையை திருப்பி உள்ளனர்.  ஏற்கனவே லிபியாவில் கால் பதித்துள்ள அவர்கள் மற்ற ஆப்ரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஈராக் மற்றும் சிரியாவில் அவர்கள் பிடி தளர்ந்தாலும் இங்குள்ள  கச்சா எண்ணெயை கள்ளச் சந்தையில் விற்று அவர்கள் பணம் திரட்டுவது தொடரவே செய்கிறது. . அவர்களின் செயல்பாடுகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.,வால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.