நேபாளம்:  மீண்டும் மாவோஸிட்டுகள் ஆயுதப் போராட்டம்?

Must read

காட்மாண்டு:
நேபாள மாவோயிஸ்ட் அமைப்பு ஒன்று மீண்டும் ஆயுதப்போராட்டத்தை துவங்கப்போவதாக அறவித்துள்ளது அந்நாட்டில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தில் மாவோஸ்ட் அமைப்பினர் மேற்கொண்ட ஆயுதப்புரட்சியின் விளைவாக அங்கு மன்னராட்சி முறை ஒழிந்து நாடாளுமன்ற அமைப்பு உருவானது.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் மொத்தம் ஆறு கட்சிகளாக பிளவு பட்டுள்ளனர். வலதுசாரி சிந்தனை கொண்ட மாவோயிஸ்ட் அமைப்பினர்  பாராளுமன்ற ஜனநாயக அமைப்பை ஏற்று செயல்படுகிறார்கள்.a
தீவிர இடதுசாரி பிரிவினர் தான் மக்கள் யுத்தம் பற்றி குரல் எழுப்பி வருகிறார்கள்.  நேத்ரா பிக்ராம் சந்த் தலைமை தாங்கும் பிப்லேப் என்கிற மாவோயிஸ்ட் கட்சி ஏற்கனவே ஆயுதப் போராட்டத்தை அறிவித்திருந்தது. சமீபத்தில் மேலும் இரண்டு மாவோயிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசிவருகின்றன.
இந்த அமைப்பினர் ஆயுதப்போராட்டத்தை துவக்கவில்லை என்றாலும், இவ்வமைப்பின் தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே எந்த நேரத்திலும் நேபாளத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆயுதப்போராட்டத்தை துவக்கும் நிலையே இருக்கிறது.

More articles

Latest article