சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் லுங்கி டான்ஸ் பாட்டுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடினர்.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

 

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்கு 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி 49 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் அணிகளில் தரவரிசையில் பின்தங்கியுள்ள அணியும் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் இதுவரை 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்தை தோற்கடித்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியையும் தோற்கடித்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய வெற்றியை மைதானத்தில் கொண்டாட துவங்கிய ஆப்கான் வீரர்கள் தொடர்ந்து அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமிலும் அதனைத் தொடர்ந்து தங்கள் ஹோட்டலுக்கு செல்லும் வழியில் வாகனத்திலும் ஆட்டம் போட்டு கொண்டாடினர்.

இதில் லுங்கி டான்ஸ் பாட்டுக்கு அவர்கள் ஆடிய ஆட்டம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.