சென்னை: காஸ் சிலிண்டர் விலையேற்றத்துக்கு ஆப்கன் பிரச்சினை காரணம் என்று பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது. இன்னும் சகஜநிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கையில், மோடி அரசு, மக்களின் வயிற்றில் மேலும் மேலும் அடித்து வருகிறது. எரிபொருட்களின் விலையை வரலாறு காணாத அளவில் அடுத்தடுத்து உயர்த்தி, நாட்டு மக்களின் கடுமையான அதிருப்திக்கும், வயிற்றெரிச்சலுக்கும் ஆளாகி வருகிறது.  பெட்ரோல் டீசல் விலை ரூ.100ஐ கடந்த நிலையில், சமையல் எரிவாயு விலையும் ரூ.1000ஐ நெருங்கி உள்ளது  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை விலையை ஏற்றி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி, 875 ரூபாய் 50 காசாக அதிகரித்தது. தற்போது செப்டம்பர் 1ந்தேதி  சமையல் சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வரும் விலை உயர்வு இல்லத்தரிசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நலன் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத மோடி அரசை பொதுமக்கள் தூற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது ஏதாவது பேசி, மக்களிடையே சாதி, மத, இன ஒற்றுமையை சீர்குலைத்த்து  வருபவரான மாநில பாஜக துணைத்ததலைரான கருப்பு முருகானந்தம், தற்போது, கேஸ் விலை உயர்வு குறித்து தெரிவித்துள்ள கருத்து, கருப்பு முருகானந்தம் பொருளாதார மேதையாகவும் மாறி இருப்பதை வெளிக்காட்டியுள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து அவர் சொல்லியிருக்கிறார் என்றால்,  ஆப்கான் விவகாரம், சீனா அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் இருப்பதால், காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று பிதற்றியுள்ளார்.
இந்த போலி பொருளாதார மேதையின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் கருப்பு முருகானந்தத்தை புதிய பொருளாதாரை மேதை என்றும், அருவருப்பான வகையிலும் கழுவு ஊற்றி வருகின்றனர்.