சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வனம், சுற்றுச்சூழல்,, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில்,  மானிய  கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நேற்று  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன

இன்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலுரை நிகழ்த்தி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.