டில்லி,

மிழர்களின் வரலாறு காணாத எழுச்சி காரணமாக மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

இதன் காரணமாக டில்லியில் பேட்டியளித்த மத்திய சுற்றுசூழல் இணைஅமைச்சர் அனில்மாதவ் தவே, பீட்டாவை தடை செய்வது குறித்து ஆலோசித்துதான் முடிவு செய்யப்படும் என நழுவலாக பதிலளித்தார்.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை நிராகரித்த தமிழக இளைஞர்கள், நிரந்தர தீர்வு வேண்டி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

‘பீட்டா அமைப்பையும்  தடை செய்ய வேண்டும் என்று கோரி மெரினா உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக பீட்டா அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.

ஆனாலும், தமிழர்களின் தொடர் போராட்டம் காரணமாக பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பீட்டா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். அதற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரங் கள் வருகின்றன.  அவர்கள்  ஜல்லிக்கட்டு பிரச்சினைகளை முன்னெடுத்து செல்கிறார்கள். அந்த அமைப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம்.  

மத்திய அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யும். பீட்டாவை தடை செய்வது குறித்து ஆலோசித்துதான் முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்