தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி: மிரண்டு போயுள்ளனர் ஆட்சியாளர்கள்…

Must read

சென்னை,

மிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத எழுச்சி கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

என்ன செய்வது என திக்குதெரியாமல் திண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆட்சி யாளர்களுக்கும், அதிமுகவினரும் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை அதிமுகவினர் ஆதரவுடன் அரசு அதிகாரிகள் ஒருசில இடங்களில் நடத்தினர்.

இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மேலும் கொதித்து போய் உள்ளனர்.

அலங்காநல்லூரில் நானே போட்டியை தொடங்கி வைப்பேன் என்று வீராப்பாக பேசிய தமிழக முதல்வர் ஓபிஎஸ் வெறுங்கையோடு திரும்பி வருகிறார். அவரால் அலங்காநல்லூர் பகுதிக்கே போக முடியவில்லை.

கோவையில் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்த அமைச்சர் வேலுமணி போராட்டக்காரர்களால முற்றுகையிடப்பட்டார். விட்டால் போதும் என்று ஓடிவிட்டார்.

தஞ்சாவூரல் போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் ஜல்லக்கட்டு போட்டியை தள்ளிவைத்து விட்டு அகன்றுவிட்டார் ஆட்சியர்.

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு  நடத்த வந்த அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் மீது போராக்காரர்கள் தண்ணீர் பாக்கெட்டை வீசி துரத்தி அடித்தனர்.

மதுரை அருகே  நத்தம் கோவில்பட்டியில் நடத்தப்படுவதாக இருந்த ஜல்லிக்கட்டு  ரத்து செய்யப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அவரும் விரட்டியடிக்கப்பட்டார்.

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டம் நடைபெறும் பந்தலை போலீசார் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

ஈரோட்டில் பாஜகவினர்  ஜல்லிக்கட்டு நடத்த முயன்றனர். அவர்கள்  போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் ஜல்லிக்கட்டு மாடுகளை கொண்டுவந்தவர்கள் மாடுகளை விட்டு விட்டு ஓடினர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணாமல் தற்காலிக தீர்வு அடிப்படையிலேயே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர். அதன் காரணமாக நிரந்தர தீர்வு எட்டும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்து, போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அரசு மற்றும் அதிமுகவினர் தங்களின் கவுரவ பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டு, தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பந்தயங்களை நடத்த  முற்பட்டனர்.

ஆனால்,  அவர்களுக்கு  மக்களிடமிருந்து கிடைத்தது அவமானம் மட்டுமே.

தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி கண்டு மிரண்டு போயுள்ளனர் ஆட்சியாளர்கள்…

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article