சென்னை:
தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.
Best and greet என்ற தலைப்பில் செஸ் கிரான்ட் மாஸ்டர் ப்ரக்யானந்தாவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை விடுமுறை குறித்து கேட்டபோது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும், தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.