சென்னை:

தமிழகத்தில் அதிமுக.வின் இரு அணிகளும் இணைந்துள்ளன. இதற்கு மத்திய அரசு மிக முக்கிய பங்காற்றியிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. இதற்கு பரிகாரமாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக.வுடன் பாஜ கூட்டணி வைத்து தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஏற்ப தற்போதே அதிமுக.வை மத்திய அரசில் இணைத்துக் கொள்ள பாஜ முடிவு செய்துள்ளது. அதிமுகவுக்கு ஒரு கேபினட், 2 இணை அமைச்சர் பதவி வழங்க பாஜ முடிவு செய்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்பிதுரை, மைத்ரேயன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் நடக்கவுள்ளது. அமித்ஷா உள்துறை அமைச்சராகவும், ராஜ்நாத்சிங் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் நிதித்துறை, வெளியுறவு துறைகளில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இக்கட்சியை சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சர்களாக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இந்த வகையில் விரைவில் நடக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது அதிமுக.வும் இடம்பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.