சென்னை
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்புக் குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவுள்ளது
இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளா நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel