இரட்டை இலை விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி;

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.

விசாரணையை முன்னிட்டு டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லி போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இறுதி விசாரணை வரும் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
English Summary
admk symbol enquiry post pon to october 13 by election commission of india