சென்னை:
.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.