ஓசூர்
அதிமுகவினர் தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்துள்ளனர் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதியில் போட்டியிடும் முருகன் மற்றும் பிராகஷ் ஆகியோரை ஆதரித்து சூளகிரி, பேரிகை, பாகலூர், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி தலைவர் முக ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை ஆற்றி உள்ளார்.
உதயநிதி தனது உரையில், “சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. நாம் மோடியின் அடிமை அதிமுகவை ஓட ஓட விரட்டி அடித்துள்ளோம். பாஜக மற்றும் அதிமுகவினர் அதை மறக்கவில்லை என்பதால் மோடிக்கு நம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் பாஜகவிற்குப் பூஜ்ஜியம் தான் கிடைக்கும். பாஜகவின பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் சொந்த பணம் எடுக்கப் போனதில் இறந்தனர். நானும் மோடி சொன்ன புதிய இந்தியாவைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
அதிமுக மற்றும் பாஜகவை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் போலச் செல்லாக்காசாக்க வேண்டும். மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி ஜிஎஸ்டி பணத்தைத் தர முடியாது என்ற மோடி ரூ.8000 கோடி ரூபாயில் சொகுசு விமானத்தை வாங்கினார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.10,000 கோடியில் கட்டுகிறார் மோடி. இது என்ன அவர் அப்பா வீட்டுப் பணமா?
தமிழக அர்சு புயல் நிவாரணம் கேட்டபோது, மத்திய அரசு கொடுத்தது ரூ.500 கோடி மட்டுமே என்பதை தமிழக முதல்வர்தான் கேட்க வேண்டும். பிரதமர் மோடி முட்டி போடச் சொன்னாலும், குட்டிக்கரணம் அடிக்கச் சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி அதைச் செய்வார்.
எனவே அடிமை அதிமுக, பாசிச பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதிமுகவினர் தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்துள்ளனர். இன்னும் விட்டால், நாட்டையே விற்று விடுவார்கள். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்து, கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். பாஜகவின் புதிய கல்விக் கொள்கையால் 3 மற்றும் 5-ஆம் வகுப்புக்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இரட்டை இலைக்குப் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவிற்குத்தான் செல்லும். அதிமுக வென்றால் கூவத்தூருக்கோ, பாஜகவிற்கோ ஓடி விடுவார்கள் என்பதை உணர்ந்து திமுகவை ஆதரிக்க வேண்டும்” எனப் பேசி உள்ளார்.
[youtube-feed feed=1]