சென்னை

திமுகவினர் தங்கள் கூட்டணி வேட்பாளர் குஷ்புவைத் தோற்கடிக்க சதிவேலை செய்வதாக  முன்னாள் பெண் உறுப்பினர் குஷ்புவிடம் தெரிவித்துள்ளார்.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது.   இந்த கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.  அவர் இன்று அந்த தொகுதியில் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள திரு விக குடியிருப்பு, நக்கீரன் நகர், எம் கே ராதா நகர், கிரியப்பா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

பாஜக வேட்பாளர் குஷ்புவுக்குப் பலர் மலர் தூவி பொன்னாடை  போட்டு ஆரத்தி எடுத்தனர்.  குஷ்பு வேகமாக நடக்கக் கூடியவர் என்பதால் அவர் தன்னுடன் வந்தவர்களிடம் நான் நடந்தால் நீங்கள் ஓட வேண்டி இருக்கும் எனக் கூறி உற்சாகம் அளித்தார்.

அவர் தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் பிரசாரம் தொடங்கும் போது அவரை அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் கற்பகம் சந்தித்தார்.  அவர் குஷ்புவிடம்,. “அதிமுகவினருக்கு தங்களை நம்பி வந்தவர்களை வாழ வைக்கத் தெரியும்.  ஆனால் ஒரு சில அதிமுகவினர் வேறு மாதிரி சதி வேலை செய்து உங்களைத் தோற்கடிக்க முயல்கின்றனர்.

பலரும் உங்கள் முன் நடிக்கின்றனர்.  உங்களை ஜெயிக்க வைக்க யாரும் பணி ஆற்ற மாட்டார்கள்.  எங்களைப் போல் இந்த குடிசை பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமே உங்களை வெற்றி பெறச் செய்வார்கள்,.   உங்கள் பின்னால் சதி வேலை செய்பவர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ என்பது எனக்கு தெரியாது என்பதால் நான் சுந்தர் அண்ணாவிடம் தனியே பேச உள்ளேன்” எனத் தெரிவித்தார்.