சென்னை
அதிமுக பேச்சாளரான நடிகர் அருள்மணி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அருள்மணி தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார் இவர் சூர்யாவின் வேல் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் இதுவரை தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அருள்மணி நடிகர் மட்டுமன்றி, அ.தி.மு.க.வின் பேச்சாளராகவும் உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் வழக்கமான பிரசாரப் பணிகளை முடித்து வந்து, சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வில் இருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகில் அருள்மணி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பலரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel