டெல்லி: அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், எடப்பாடி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, பொதுக்குழுவில் அதிமுக வின் இடைக்காலத் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு உள்ளது. இந்த ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்த நிலையில், நாளை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பாகவும் புதிய கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.