சென்னை

திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ வி ராஜு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

அதிமுகவில் இருந்து சமீபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஏ வி ராஜு நீக்கப்பட்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளைக் கூறியது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

பல திரையுலகினர் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஏ.வி.ராஜுவுக்கு கடும் கண்டனங்கள் எழுப்பினர்.  தற்போது அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் அந்த நோட்டிசில்,

“என்னைக் கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நீக்கம் தொடர்பான அறிவிப்பை திரும்பப் பெறவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

அ.தி.மு.க. உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு. என்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கவில்லை” 

எனக் குறிப்பிட்டுள்ளார்.