பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்யவுள்ள  ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மதியம் (முற்பகல்) விண்ணில் பாய்கிறது.  அதற்கான  24மணி நேர கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கு கிறது. ஆதித்யா விண்ணில் ஏவுவதை நேரில் காண இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. விண்ணில் ஏவப்படும் ‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி நிகர் சாஜி பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா எல்1 விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன்  இன்று மதியம் 11.50மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தொடங்குகிறது. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைக் கண்காணிக்கவும் சூரியக் காற்று (solar wind) போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகத்தை தொடங்குவதே இந்தத் திட்டம் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

சூரியன் ஆய்வு செய்யப்படுவது இது முறை அல்ல. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக ஆர்பிட்டர்களை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவின் திட்டம் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய விண்ணுக்கு செலுத்தப்பட  ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.  இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் மூலம்  செப்டம்பர் 2-ம் தேதி (நாளை)  காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ஏவுகணை மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. சூரியனை அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலமானது குரோமோஸ்ஃபியர், சூரியனின் வெளிப்புற அடுக்கு & ஒளிக்கோளம் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.  இந்த விண்கலத்தின் மொத்த எடை  244 கிலோ. அத்துடன் ஏழு கருவிகளையும்  (1231 Kg திரவ எரிபொருளால் நிரப்பப்படும்) சுமந்து செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விண்கலத்தில்,  ஆஸ்பெக்ஸ், சூட், வெல்சி, ஹீலியோஸ், பாபா, சோலெக்ஸ், மேக் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகளைக்கொண்டு, ஆதித்யா எல்-1 விண்கலம்  விண்வெளியில் சூரியனை ஆராயும்.

இந்த நிலையில், செப்டம்பர் 2-ம்தேதி விண்ணில் செலுத்துவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன்  இன்று (செப்டம்பர்), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கு கிறது.

இந்நிலையில்,  விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. மேலும், ‘விண்ணில் செலுத்துவதற்கான சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. விண்கலம் பூமியில் இருந்து சூரியனின் எல் 1 (லெக்ராஞ்சியன் புள்ளி)  நிலைநிறுத்தப்பட உள்ளது’ என இஸ்ரோ கூறியுள்ளது.

செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1…!