கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் கோவை உள்ளது.  இங்கு நேற்று 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 2.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 2,237 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,29,778 பேர் உயிர் இழந்து தற்போது 2,229 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் தினசரி பரவலில் முதல் இடத்தில் உள்ள கேரள எல்லையில் கோவை மாவட்டம் அமைந்துள்ளது.  எனவே கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மால்கள், உள்ளிட்டவை மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவைக்கு விமானம் மற்றும் ரயிலில் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.