மதுரை,

துரை ஐகோர்ட்டு கிளையில், மேலும் 26 அரசு  வழக்கறிஞர்கள் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டுக்கும் கூடுதலாக 17 பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

எற்கனவே 41அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் 26 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வ கேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு சிறப்பு வழக்கறிஞர் கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 74 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன.

அதுபோல  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அட்வ கேட் ஜெனரல் தலைமையில் 41 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன.

இவர்களில் அரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், சிறப்பு அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவிகளை பொறுத்தவரை மறு உத்தரவு வரும்வரை பதவியில் தொடரலாம்.

அரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

ஏற்கனவே பதவியில் இருந்த அரசு வழக்கறிஞர்கள் 34 பேரின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் 26 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், தலா 6 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (சிவில்), 3 அரசு வழக்கறிஞர்கள் (குற்றவி யல்) என 17 பணியிடங்களும்,

ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர், தலா 3 கூடுதல் அரசு வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் (குற்றவியல்), 2 அரசு வழக்கறிஞர்கள் (சிவில்) என 9 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சென்னை, மதுரை ஐகோர்ட்டு கிளையில்  அரசு வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 115-ல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் (எண்:580), தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர் பணியிடங்களை அதிகரிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்பேரில் 26 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள் ளது. இதனிடையே, ஏற்கனவே காலியாக உள்ள 34 அரசு வழக்கறிஞர் காலி பணியிடத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் 4 அரசு வழக்கறிஞர்கள் என இருந்த நிலையில், தற்போது ஒரு அரசு வழக்கறிஞர் மட்டுமே இருப்பதாகவும், அமர்வு விசாரணை முடிந்து நீதிபதிகள் தனி விசாரணைக்கு போகும்போது, அரசு வழக்கறிஞருக்காக காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.