சிம்லா: பங்கு சந்தை முறைகேடுகளில் சிக்கி உள்ள அதானி நிறுவனத்தில் மாநில கலாத்துறை அதிகாரிகள் சோதன நடத்தினர். இந்த ரெய்டு, இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்து வரும், இமாச்சல பிரதேசத்தில்  அதானி நிறுவனத்தைச்  சேர்ந்த  வில்மர் நிறுவனத்தில்  இமாச்சல மாநில கலால்துறை, வரித்துறை யினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  அதானி நிறுவனம் முறையாக  ஜிஎஸ்டி செலுத்தாத காரணத்தால் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.

அதானி வில்மர் நிறுவனம், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட வில்மர் ஆகியவற்றின் 50:50 கூட்டு முயற்சியாகும்.வணிக நிறுவனமாகும். இது சமையல் எண்ணெய்கள் மற்றும் சில உணவுப் பொருட்களை ஃபார்ச்சூன் பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது,  இந்த நிறுவனம் இமாச்சல பிரதேசத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.  பழங்களுக்கான குளிர்பானக் கடைகளில் இருந்து மளிகைப் பொருட்கள் விநியோகம் வரை மொத்தம் ஏழு செயல்படும் நிறுவனங்களைக் கொண்டுள்ளது. ஃபார்ச்சூன் பிராண்டின் கீழ் அதன் சமையல் எண்ணெய்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது அதானி வில்மர் நிறுவனம்.

சமீபத்தில்,  அமெரிக்க ஆய்வு நிறுவனமான  ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழுமம் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில், இமாச்சல் காங்கிரஸ் அரசு, தனது மாநிலத்தில் உள்ள வில்மர் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறது.  வில்மர் நிறுவனம், கடந்த  ஐந்து ஆண்டுகளாக ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநில கலால்துறை, அதிகாரிகள் வில்மர் நிறுவனத்திற்கு சென்று உரிய ஆவணங்களைச் சரிபார்த்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.