adani bank debtஅதிர்ச்சித் தகவல்: விஜய் மல்லையாவை விட  கவுதம் அதானியின் நிறுவனம் 8 மடங்கு அதிகமாக வங்கிகளுக்கு கடன்பட்டுள்ளது

இப்போது வெளிவரும் தேர்தல் செய்திகளுக்கு மத்தியில் மற்றொரு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது கவுதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமம், தொழிலதிபர் விஜய் மல்லையா விட ரூ 72,000 கோடி இன்னும் அதிக பணம் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டியுள்ளது என்று வெளியாகியுள்ளது.

பிடிஐ படி, ஜே.டி. (யு) உறுப்பினரான பவன் வர்மா, வியாழக்கிழமை அன்று மாநிலங்களவையில், பெருநிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாத கடனைப் பற்றி விவாதித்து, அதானி குழுமத்திற்கு “கற்பனைக்கு எட்டாத” அளவிற்கு உதவிகள் கிடைத்து, ரூ 72,000 கோடி கடன் அதற்கு உள்ளதாக கூறினார்.

ADANI BANK DEBT 2பொதுத்துறை வங்கிகளுக்கு பெருநிறுவனங்கள் ரூ .5 லட்சம் கோடி கடன்பட்டிருக்கின்றன, என்று குறிப்பாக அதானி குழுமத்தைக் குறிப்பிட்டு ஜே.டி. (யு) உறுப்பினர், கூறினார்.
கேள்வி நேரத்தின் போது இப்பிரச்சினையை எழுப்பி, கடனைத் திருப்பி கொடுக்க முடியாதவர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுப்பதாக பவன் வர்மா குற்றம் சாட்டினார்.

“பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ .5 லட்சம் கோடி பெருநிறுவனங்கள் கடன் பட்டுள்ள, இதில் சுமார் ரூ 1.4 லட்சம் கோடி வெறும் ஐந்து நிறுவனங்களால் கொடுக்கப்பட வேண்டியது, அவை லான்கோ, ஜி.வி.கே, சுஸ்லான் எனர்ஜி, இந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் மற்றும் அதானி குழுமம் மற்றும் அதானி பவர் என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனம், “என்று அவர் கூறினார்.

“அதானி குழுமம்,” என்றழக்கப்படும் இந்த குழு நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில்  கட்ட வேண்டிய கடன் தொகை சுமார் ரூ.72,000 கோடி ரூபாய், என்று அவர் அறிக்கையில் மேற்கோள் காட்டி கூறினார்.

“விவசாயிகள் பயிர் கடன்களாக செலுத்த வேண்டிய தொகை ரூ 72,000 கோடி என்று நேற்று குறிப்பிடப்பட்டது. ஆனால் அதானி குழுமம் வங்கிகளுக்கு ரூ 72,000 கோடி கொடுக்கவேண்டி உள்ளது,” என்று அவர் கூறினார்.

“அரசாங்கத்திற்கும் இந்த குழுமத்திற்கும் என்ன உறவு என்று எனக்குத் தெரியாது, ஆனால்  இந்த குழு உரிமையாளர் (கவுதம்) அதானி, பிரதமர் சென்ற எல்லா இடங்களில் காணப்பட்டிருக்கிறார், எல்லா நாட்டிலும் அதாவது சீனா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், என்று பிரதமருடன் இருந்திருக்கிறார்”, என்று ஜே.டி. (யு) உறுப்பினர் கூறினார்.

 

“கற்பனைக்கு எட்டாத அளவிற்கு இந்த நிறுவனத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் குஜராத்தில் இந்த நிறுவனத்தினுடைய சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது” என்று  வர்மா கூறினார்.

எனினும், ஜே.டி. (யு) உறுப்பினரால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட போதும், இதில் சுவாரசியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த நிறுவனம் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா, வங்கிகளுக்கு கொடுக்கவேண்டிய ரூ. 9,400 கோடியை காட்டிலும் மிக அதிகமானது என்பது தான் .