வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி கடும்மோதல்.. 3 நடிகைகள் மோதலால் தீப்பிடித்த இணையதளம்..

Must read

ணையதளம் தீப்பிடிக்கும் அளவுக்கு மூன்று நடிகைகள் வீடியோவிலும், டிவிட்டரிலும் மோதிக்கொண்டனர்.
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இந்த திருமணத்தை லட்சுமி ராம கிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு பதில் அளித்த வனிதா இருவரையும் திட்டித்தீர்த்தார். கஸ்தூரியை காமெடி பீஸ் என்று சொல்லி தனது இணைய தள டிவிட்டர் பக்கத்திலிருந்து பிளாக் செய்தார்.

இதற்கிடையில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனை வீடியோ கான்பரன் சிங் மூலமாக சந்தித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன் பேச தொடங்கிய நிலையில் இடையில் குறுக்கிட்ட வனிதா, ‘நான் உங்களிடம் 2 கேள்விகள் கேட்க வேண்டும்’ என்றார்.
’என் திருமண விஷயத்தில் தலையிட நீங்கள் யார், நீங்கள் என்ன ஜட்ஜா? அதற்கு நீதிமன்றம் இருக்கிறது. கோர்ட் இருக்கிறது’ என்று லட்சுமியை பேச விடாமல் வனிதா இடைவிடாமல் பேசினார். ஒரு கட்டத்தில், ’குழாயடி சண்டைக்காரி மாதிரி பேசறியே’ என்று லட்சுமி கேட்க, ’ஆமாம் இது தெரு சண்டைதான். நீ ஒரு புருஷனை கட்டியிருந்தா பத்தினியா உன்னைப் பற்றி சொன்னால் என்னவாகும் தெரியுமா?’ என்று ஒருமையில் பேசத் தொடங்கினார். இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் இணைப்பை துண்டித்துவிட்டு சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article