முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகை வழக்கு

Must read

சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பெருமை 10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாக நடிகை சாந்தினி புகார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் ஏற்கனவே விசாரணையில் உள்ளது. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம் என்ற உத்தரவின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகை தொடர்ந்த வழக்கு வரும் 5-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

More articles

Latest article