சென்னை
நடிகை ஸ்ரீப்ரியா கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பாதிப்பு என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது.
தமிழகத்திலும் இந்த பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதைத் தாண்டியோர், இணை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாக இன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான ஸ்ரீப்ரியா இன்று டிவிட்டரில் தாம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீப்ரியா 80களில் கமலஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவருடைய கணவரான ராஜ்குமார் சேதுபதியும் நடிகர் ஆவார்.