மும்பை

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது நீண்ட நாள் காதலர் ஜாகிர் இக்பாலை திருமணம் செய்துக் கொண்டார்.

பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக 2010 ஆம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பெரிய அளவில் அறிமுகமாகி தபாங் படத்தின் மற்ற இரண்டு பாகங்களிலும் சல்மான் கானுடன் நடித்திருந்தார்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரமாண்டியிலும் நடித்திருந்த இவர் தமிழில் லிங்கா படத்திலும் நடித்துள்ளார். நேற்று சோனாக்ஷி தனது காதலர் ஜாகீர் இக்பாலை கரம்பிடித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தநிலையில் நேற்ற் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் சேர்ந்து நடித்தபோது காதலித்தாகவும் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் ஒன்றாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.