தெலுங்கு நடிகர்கள் நானி, பவன் கல்யாண். தமிழ் நடிகர்கள் விஷால் லாரன்ஸ் உள்ளிட்ட பல ஹீரோக்கள் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச் சாட்டு சொன்னவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி.
அதுபற்றி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீஸ் நிலையும் முன் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். டோலிவுட்டில் தனக்கு மிரட்டல் வருவதாக சொல்லி ஐதராபாத்திலிருந்து சென்னையில் குடியேறினார். இங்கிருந் தபடியே குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். சிறிது காலம் அமைதியாக இருந்தவர் மீண்டும் வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறார்.


ஸ்ரீ ரெட்டி வீடியோவை வெளியிட் டுள்ளார். அதில் டோலிவுட்டில் போதைப்பொருள் மற்றும் ஒழுக்கக் கேடான நடவடிக்கைகள் அதிகம் இருப்பதாகவும், காவல்துறை சரியான பாதுகாப்பு அளித்தால் சம்பந் தப்பட்ட பிரபலங்களின் பெயரைக் கூறத் தயாராக இருகிறேம்’என தெரிவித்தி ருக்கிறார்.
அவர் கூறும்போது,’நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும். போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ரேவ் பார்ட்டிகளை நடத்தும் நட்சத்திர வாரிசுகள் பற்றியும் தனக்கு தெரியும் இந்த விவகாரத்தில் பல உயிர்களை காப்பாற்ற விரைவான நடவடிக்கை அதிகாரிகளை எடுக்க வேண்டும்.
சுஷாந்த் வழக்கில் மோடி அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது எனது சல்யூட்.
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி